ஆரோக்கிய பாடம் – 20

தலைப்பு : அவசரம் (Hurry)

(HURRY) (அவசரம்) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘மிகுவிரைவு நோக்கி உந்திவிடுவது’ என்று ஆங்கில அகராதி பொருள் விளக்கம் அளிக்கிறது.

“இயற்கை அவசரப்படுவதே இல்லை, இருப்பினும் அது அனைத்தும் நிறைந்ததாய்க் காட்சியளிக்கிறது” என்றார் சீனத்தின் சிந்தனையாளர் லாவோ ஸ (Lao Tsu)

மனிதகுலத்திற்குக் கிடைத்த பெரும்பெறான பல வசீகரிக்கும் ஆத்மாக்களில் தலையாயவரான கவிஞர் கபீரின் புகழ்பெற்ற இரண்டடிக் குறட்பா ஒன்று பின்வருமாறு சொல்கிறது:

‘தீரே தீரே ரே மனா தீரே சாப் குப் ஹோயே
மாலி சீன்சே சாவ் கடா ரிட்டு ஆயே பல் ஹோயே’

இதன் பொருள்:

மெல்ல, மெல்ல ஓ மனமே மெல்ல அவையெல்லாம் நிகழ்கின்றன. தோட்டக்காரர் நீர் பாய்ச்சுகிறார் – ஆண்டு முச்சூடும் நீர்பாய்ச்சுகிறார். ஆனால், காலம் கனிந்த பின்பே மரத்தில் கனி விளைகிறது.

அவசரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘HURRY’ என்பதற்குரிய பொருள்விளக்கம் காண்போம்.

H – Hopping around – (பரபரப்பாக இயங்குவது): சாதனையையும் வெற்றியையும் அடைய
பரபரப்பாக இயங்குவது அவசியம் ஆகும்.

U – Urging and using – (வற்புறுத்துவதும் பயன்படுத்துவதும்);: இந்தக் கலாச்சாரத்தை ஆதரிக்குமாறு அனைவரையும் வற்புறுத்துங்கள், பயன்படுத்துங்கள். பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலேயே கவனத்தைக் குவிக்க வேண்டும். ‘வாய்ப்பு ஒரே ஒரு முறைதான் நம் கதவைத்தட்டும்’ என்று ஆழமாக நம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது.

R – Reaction all the time – (எந்நேரமும் எதிர்வினையாற்றல்): எதிர்வினை என்பது ஒரு வினையைத் தொடர்ந்து உடனடியாக நிகழக்கூடியது. வரவேற்பு எப்படி என்று அறிந்துகொள்ள நேரம் பிடிக்கும். இளைப்பாறுதலை விலையாகத் தந்து சந்தை நெருக்கடிகளுக்கு இரையாக நேர்கிறது. “என்னால் சோம்பலாக இருக்க முடியாது. காலத்துக்கு முந்தி நான் ஓடிச்செல்ல வேண்டியுள்ளது. கெடுநேரத்திற்குள் என் பணிகளை முடிக்க வேண்டும்.”; இதுதான் வெற்றியை இசைக்கும் பாடல். அவசரப்படாமல் இருப்பது ‘சோம்பேறித்தனம்’ என்பதாக முத்திரை குத்தப்படுகிறது ‘பொறுப்பற்ற தன்மை’ என்று அதற்குப் பெயர் சூட்டப்படுகிறது. ‘எனக்கு வேறு வழியில்லை’ என்று சொல்வது வசதியாகப் போய்விடுகிறது.

R – Receiving – (பெறுதல்): வல்லுநர்கள் வாயிலாக உடனடி நிவாரணத்தைப் பெறுவது
முன்னேற்றத்தின் அடையாளம் ஆகும்.

Y – Yet More – (இன்னும் அதிகம்): இன்னும் அதிகம், அதற்கு மேலும் அதிகம் என்பதே
சூத்திரம். மேலும் பெரியது, மேலும் சிறந்தது, மேலும் வேகம், மேலும் வேகம்,
வேகம்… வேகம் என்பது தாரகமந்திரம் ஆகிறது. வாழ்க்கையின் தரம், பெறுமதி
என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.

பரபரப்பாகச் செயல்படுவதே சிறந்தது என நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு பணியில் கவனத்தைக் குவித்துச் செயல்படுவதுதான் முக்கியமேயொழிய விரைவாகச் செய்வது அல்ல.

ஒரு வேளை நாம் தவறான வேகத்தில் சென்றுகொண்டிருக்கக் கூடும். இவ்வாறு தலைதெறிக்கும் வேகத்துடன் போய்க்கொண்டிருந்தால், வாழ்க்கையிலிருந்தே நாம் காணாமல் போய்விடுவோம். விரைவு மீது வைத்திருக்கும் இந்தக் தணியாத ஆர்வத்தைக் கைவிடுவோம். மாறாக, மந்தகதியில் செயல்பட வேண்டும் என்றில்லாமல், வேகத்தைக் குறைத்து வாழ்க்கையை அனுபவிப்போம்.

நல்வாழ்வை அனுபவிக்க வேண்டுமானால், அவசரப்படுவது நெருப்பைப் போல ஆரோக்கியம் அளிக்கும் ஆற்றலை விழுங்கிவிடுகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வது முக்கியமானதாகும். ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க இளைப்பாறுதல் மட்டுமே துணை செய்யும்.

ஆரோக்கியத்துக்குரிய நேரத்தையும் முன்னுரிமையையும் அளிக்கும்பொழுது நிச்சயமாக நாம் ஆரோக்கியத்தைப் பெறலாம். நமது உணவில், வேலையில், சிந்தனையோட்டத்தில் அள்ளித்தெறித்து அவசரத்தைக் காட்டக்கூடாது. பையத் தின்றால் பனையையும் தின்னலாம் என்பது போல மெதுவாகவும் உறுதியாகவும் செயல்களைச் செய்வதே நல்வாழ்வுக்கான பாதையைத் திறந்துவிடும்.

ஆரோக்கிய பாடம் – 19

கவலைப்படுவதால் பயன் இல்லை

கவலை என்பது ஆரோக்கியவாழ்வு ஆற்றலின் ஒட்டுமொத்த வீண்;விரயம் என்று நல்வாழ்வுப்பயணத்தில் நாம் புரிந்துகொள்கிறோம்.

கவலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான WORRY என்பதனைப் பின்வருமாறு பிரித்து விளக்கம் காண்போம்:

W – Way to Illness – (பிணிநிலை நோக்கிச் செல்லும் வழி):
கவலை என்பது ஓர் எதிர்மறை உணர்வு. உடலில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தி அனைத்து நோய்களுக்கும் இட்டுச்செல்கிறது.

O – Order of today – (நிகழ்காலத்தின் நியதி):
கவலை இயல்பானது என்று நாம் ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். “நான் என் குடும்பத்தினரை நேசிக்கிறேன், அவர்களைப் பற்றி நான் அல்லாமல் வேறு யார் கவலைப்படுவது?” என்று நீங்கள் சொல்லக்கூடும். உண்மையில் உங்கள் குடும்பத்தினரை நீங்கள் நேசிக்கிறீர்கள், அவர்களைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள், அவர்களைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள், அதன்பொருட்டு கவலை கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை இழப்பதில் போய்முடிகிறது. நீங்களே ஆரோக்கியமற்று இருக்கும்போது, பிறரை நீங்கள் பாதுகாக்க முடியுமா?

R – Resistance to acceptance – (ஏற்புக்கான எதிர்ப்பாற்றல்): சிகிச்சைகள், மருத்துவர்கள், மரபுகள் ஆகிய பெயரில் ஏதொன்றைப் பற்றியும் எதுவும் தெரிந்துகொள்ளாமல் நாம் அவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம். நமது வற்புறுத்தலைத் தொடர்ந்து எதிர்ப்பாற்றல் ஏற்படுகிறது. எதை நீங்கள் எதிர்க்கிறீர்களோ அது எஞ்சிவாழ்கிறது.

R – Reward Culture – (நற்பயன் கலாச்சாரம்): ‘ஆயுள் காப்பீடும் பிணிநிலைக் கலாச்சாரத்திற்கு ஆதரவான விதியும்’ நோய்கள் நீங்க வேண்டும் என்பதற்காகப் பணத்தைச் செலவிடுவதன் மூலம் இழந்த ஆரோக்கியத்;தை நீங்கள் திரும்பப்பெறமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோய்வாய்ப்படுவதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே நற்பயன் கவனி;ப்பு மட்டுமே. உங்களைச்; சுற்றியுள்ளவர்களின் கவனிப்பும் அக்கறையும் உங்களுக்குக் கிடைக்கும்பொழுது, அதெல்லாம் அனுதாபமும் பரிதாபமும்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். உண்மையான நல்வாழ்வு என்பது இயற்கையான வாழ்வில் கவனம் செலுத்துதல் என்பதுதான். அப்படிச் செய்தால் கவலை பறந்துபோய்விடும்;;;; மறைந்துமாயமாகும்.

Y – Year by year – (ஆண்டுகள் செல்லச்செல்ல): நாட்கள் செல்லச்செல்ல இதே பழக்கவழக்கங்கள் தொடர்ந்தால், தீவிரமானால், நீங்கள் இன்னும் கூடுதலாகக் கவலைப்படுகிறீர்கள்.

பழங்களை உண்பது உங்கள் உடல் முழுமைக்கும் இளைப்பாறுதல் அளிக்கிறது. நோய்க்குறிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அடுத்து, கவலைப்படுவதில் பயன்இல்லை என்று நீங்கள் தெரிந்து கொள்கிறீகள்.

ஆரோக்கிய பாடம் – 18

உடல்தான் நமது இல்லம்

‘பாதுகாப்பான இல்லமே மகிழ்ச்சியான இல்லம்’. நல்வாழ்வு இல்லத்தில் நாம் அனைவரும் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

பாதுகாப்பான இடத்தில் (இல்லத்தில்) அனைவருமே கருணை நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். எள்ளல், பூசல், புறங்கூறுதல், வம்பளத்தல், கேலிப்பெயரால்; அழைத்தல் ஆகியவை மிகவும் அரிது.

இரக்கம், சலுகையளித்தல், மன்னித்தல் ஆகியவை அன்றாட வாழ்வின் வழக்கமான பாதைகளாக இருக்கின்றன.

பாதுகாப்பான இடத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் சிரிப்பு பொங்கியெழுந்து எல்லோரையும் பற்றிக்கொண்டு விடுகிறது. இந்தச் சிரிப்பொலி தொலைக்காட்சியிலிருந்து கிளம்பிவருவதல்ல. அந்த உண்மையான சிரிப்பொலி பொருள் செறிந்த பணி மற்றும் விளையாட்டைப் பகிர்ந்து கொள்வதால் எழுகிறது.

பாதுகாப்பான இடத்தில் எல்லோரும் எப்போதும் பின்பற்றும் விதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால் இல்லத்தில் வாழ்ந்து பணிபுரியும் குடும்ப உறுப்பினர்களால் – குழந்தைகள் உட்பட – உண்டாக்கப்பட்டவை அவை. அவர்களுக்கு அந்த விதிகளின் மதிப்பு தெரியும்.

பாதுகாப்பான இடத்தில் உறுப்பினர்கள் ஒருவர் மற்றொருவர் சொல்வதைக் கேட்டுக்கொள்வார்கள். ஒருவர் மற்றொருவர் மீது அக்கறை செலுத்துவார்கள், அன்பு காட்டுவார்கள். இவ்வாறு பாதுகாப்பான இடம் என்பது அக்கறையை அடிப்படையாகக் கொண்டது. நம்மில் அனைவரும் அனைத்து நேரமும் அதனை நாடுகிறோம். வாழ்க்கையின் தேவையாகப் பாதுகாப்பு உள்ளது.

பாதுகாப்பான இடம் உங்கள் உடல் (இல்லம்)தான். உயிரணுக்கள், திசுக்கள், உறுப்புகள், உறுப்புமண்டலங்கள் ஆகியன இந்த இல்லத்தின் உறுப்பினர்கள் ஆவர். இவ்விதம் உடலைக் காப்பது என்பது அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறது என்றாகிறது. இது ஒருவர் தனக்காகவும் பிறருக்காகவும் நல்வாழ்வை உருவாக்கிக்கொள்வதாகும். உடல் உங்களுடையது, உடல் உங்கள் எஜமான், உடல் உங்கள் ஆசிரியர் என்பதை நினைவில் வைத்திருங்கள். உங்கள் உடலே உங்கள் இல்லம் என்பதையும் இப்போது நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் எதை உண்கிறீர்கள் மற்றும் எது குறித்துச் சிந்திக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இல்லத்தின் பாதுகாப்பு அமைகிறது. நீங்கள் எப்போதும் பழங்கள், உலர்கனிகள், கொட்டைகள், காய்கறிகள் ஆகியவற்றையே உண்ணுங்கள்.

‘அனைத்தும் அன்பு, அனைத்தும் நன்று, அனைத்தும் ஒன்று’ என்பதை எப்போதும் நினையுங்கள். மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான மிகமிகப் பாதுகாப்பான வழி இதுதான்.

ஆரோக்கிய பாடம் 17

ஆரோக்கியம் என்பது நலவாழ்வு

ஆரோக்கியம் என்றால் என்ன?

பார்த்தல், கேட்டல், ஓடுதல், முகர்தல், உணவளித்தல், குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வண்ண வண்ண பொம்மைக் கட்டங்களிலிருந்து டைனோசார் உருவாக்குதல், உலவுதல், நீச்சலடித்தல், அல்ஜீப்ரா புதிர்க் கணக்குகளுக்கு விடை காணுதல், ஷ{ பாட்டு பாடுதல் போன்று தினந்தோறும் நீங்கள் மகிழ்ச்சியுடனும் கிளர்ச்சியுடனும் செய்துவருகிற பலவகைப்பட்ட, பல்லாயிரம் செயல்களைச் செய்து முடிப்பதற்கான வல்லமையை உங்களுக்கு அளிப்பது எதுவோ, அதுவே ஆரோக்கியம் எனப்படுகிறது.
உடலுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ, அதைப் பொறுத்தே ஆரோக்கியம் அமையும். உடல் அளவில், மன அளவில், சமூக நிலையில், ஆன்மீக ரீதியில் உகந்த நிலையை அடைகின்ற உணர்வே அது. அதாவது நீங்கள் தோற்றப் பொலிவுடனும் சிறந்த உணர்வுடனும் சீரிய சிந்தனையுடனும் விளங்கும் நிலை. உங்களுக்குத் தேவைப்படும் ஆற்றல்கள் அனைத்தையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.
ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல் அதற்கும் மேலான நலவாழ்வுடன் இருக்கும் நிலையே ஆகும். நலக் குறைவு, பிணி, நோய், வலி, மன அழுத்தம், துயரம் ஆகியவற்றின் துணைவிளைவே ஆரோக்கியம் என்று இன்றைக்குக் கருதப்படுகிறது. ஆனால் அது சரியல்ல. ஆரோக்கியம் என்பது இயல்புநிலை. நிலைபேறுடன் இருப்பது. ஆரோக்கியம் என்பது விளைவேயன்றி துணைவிளைவு அல்ல.

நிறைய பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்ளுதல், உடலைக் கட்டிக் காத்தல், உறக்கம் வரும்போது உறங்கிவிடுதல் என இயற்கை நியதிகளைக் கடைபிடித்து வந்தாலே, ஆரோக்கிய நிலையை அடைந்துவிடலாம்.

அனைவரும் நலம், அனைத்தும் நல்லது என்பதை எப்போதும் நினைவில் இருத்துங்கள்.

ஆரோக்கிய பாடம் – 16

இயற்கைக்கு எதிர்நிலையில் மனிதகுலம்

கோழியா, முட்டையா எது முதலில் வந்தது? இயற்கையா, மனிதகுலமா எது முதலில் தோன்றியது? இந்தக் கேள்வியை எழுப்புவது அவசியமானதா என்ன? நல்வாழ்வு உலகில் இருப்பதற்கு இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது.

முட்டையை அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் நுண்ணறிவு தாய்க்கோழியிடம் உள்ளது. முட்டை வெடித்துச் சட்டெனக் குஞ்சு வெளிப்படுவது ஓர் அதிசயம்தான். முட்டைக்கும் கோழிக்குஞ்சுக்கும் இடையில் ஒப்புமை எதுவும் கிடையாது. முட்டைக்குள் என்ன இருக்கிறது என்பதை அது வெளிப்படுத்திக்கொள்வதில்லை. கோழிகுஞ்சும் அது தொடர்பாக ஆர்வம் கொள்வதில்லை. கோழிக்குஞ்சுகள் வளர்ந்து சேவல்களாகவோ பெட்டைக்கோழிகளாகவோ ஆகின்றன. கோழியின் உடலிலேயே இயற்கையாக அமைந்துள்ள செயல்திட்டத்தின்படி அது முட்டையிட்டு, அடைகாத்து (பெட்டைக்கோழி) கோழிக்குஞ்சுகள் அவற்றுக்கான தீவனத்தைத் தேடித் தின்னக் கற்றுக்கொடுத்து, சேவலாகவோ பெட்டைக்கோழியாகவே தற்சார்புடன் வளர உதவி செய்து வா என இந்தச் சுழற்சி இயற்கையின் மூலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நம் கவனத்துக்கும்கூட வராமல் நிகழும் இயற்கையான நிகழ்வு இது,

உடல் நலிவுற்றிருக்கும்போது அதிலிருந்து மீட்டெடுக்கும் உங்களின் உடலின் திறன் குறித்து ஐயம் தோன்றும்போதெல்லாம், உங்கள் உடல் குறித்த அற்புதத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். உடல் நமது எஜமான் என்பதையும் அதுவே நமது ஆசிரியனும் கூட என்பதையும் நினைவில் கொள்வோம். முட்டைக்குள் உறைந்திருக்கும் நுண்ணறிவைப் போன்றதே ஒரு விதையானது மரமாக வளர்வதும். விதை முளைவிட்டு, வளர்ந்து, மொட்டுவிட்டு, மலராகி, மீண்டும் விதையாகவும் மரமாகவும் என இந்தச் சுழற்சி தொடர்கிறது. இதே நுண்ணறிவுதான் அனைத்து விலங்குகளிலும் செயல்படுகிறது. மனித இனத்திலும் அவ்விதமே. இவற்றுள் மனிதகுலத்தைத் தவிர பிற உயிரினங்கள் அனைத்தும் இயற்கை விதித்த உணவுகளை உட்கொண்டு இயற்கையுடன் இயைந்து வாழ்கின்றன.

பசுக்கள் புல்லைத் தின்கின்றன. பறவைகள் தானியங்களை உட்கொள்கின்றன. தேனீக்கள் தேனைக் குடிக்கின்றன. மாமிசஉண்ணிகள் தாவரஉண்ணி விலங்குகளை இரையாகக் கொள்கின்றன. இந்த வரிசையில் நமது மூதாதையரான குரங்குகள் பழங்களை உண்கின்றன. உடற்கூறியல், உடலியங்கியல், நுண்ணுயிரியல், உயிரிவேதியியல்,மானிடவியல் போன்ற பலதுறை ஆராய்ச்சிகள் வழியாக மனிதர்கள் காய்கனி உண்பவர்கள், தானியம் தின்பவர்கள் அல்லர், தாவர உணவு உண்பவர்கள், அனைத்துவகை உணவையும் உண்பவர்கள் அல்லது மாமிசம் புசிப்பவர்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம். மனிதர்களாகிய நாம் அளப்பரிய படைப்பாற்றலைக் கொண்டு, தொழிற்சாலை தயாரித்துத் தரும் உணவையே இன்று உண்டு வருகிறோம். ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதற்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கான அரசின் நிதிநிலை ஒதுக்கீடு ஒரு லட்சம் கோடி ரூபாயாகும். உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கெனத் தனி அமைச்சகத்தையும் கொண்டிருக்கிறோம்.

பரிணாம வளர்ச்சியானது இயற்கையின் மூலமாக நடைபெறுகிறதேயொழிய, அமைச்சகங்கள் வாயிலாகவும் தொழிற்சாலைகள் வழியாகவும் அல்ல. நமது கோழிகளுக்கும் குஞ்சுகளுக்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப்பாருங்கள். இயற்கையாக அடைகாத்துக் குஞ்சுபொரிப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியைத் தொழிற்சாலைகள் மேற்கொண்டு ‘பிராய்லர்’ வகை கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்கின்றன. தொடர்ந்து அவை குஞ்சுகளைப் பொரிக்கின்றன. அவை வளர்ந்து கோழிகளாகும்பொழுது, குஞ்சு பொரிக்காத முட்டைகளைத் தருகின்றன என நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம். அது மட்டுமல்ல, இந்த முட்டைகளைச் சைவமுட்டைகள் என்று பெயரிட்டு விற்கவும் செய்கிறோம். இயற்கைக்குப் புறம்பான வழியில் நாம் செல்கிறோம் என்பது இதனால் தௌ;ளத்தெளிவாகிறது. புறவழி அறுவைச்சிகிச்சை (டிலியளள ளரசபநசல) என்ற பெயரில் நடத்தப்படும் இதய அறுவைச்சிகிச்சைகளும் அதனையே தெளிவுபடுத்துகின்றன. தொழிற்சாலையில் உருவாக்கப்படும் ‘பிராய்லர்கள்’, குஞ்சு பொரிக்காத முட்டைகள், பெருகிவரும் கருத்தரிப்பு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதை நாம் காணலாம்.

ஆழ்ந்த பெருமூச்சுடன், நெஞ்சைத் தொட்டு ‘இதுதான் முன்னேற்றமா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள நல்வாழ்வுப் பாடங்கள் துணைசெய்கின்றன. அப்படியானால் மட்டுமே நாம் இயற்கையுடன் இணங்கி வாழ முடியும். நாம் காய்கனிகளை உண்டு வாழ்பவர்கள் என்பதை நினைவில் வைத்திருப்போம். பழங்களை உட்கொள்வது ஒழுங்குநெறிகளுடன் வாழும் திறனையும் நமக்கு அளிக்கின்றன.

ஆரோக்கிய பாடம் – 15

உடலே நமது மருத்துவர்

டாக்டர் என்ற சொல்லுக்கு ஆசிரியர் என்று ஆங்கில அகராதி பொருள்விளக்கம் அளிக்கிறது. உடல்ஞானம்தான் நமக்கு மிகவும் நம்பகமான மருத்துவர்.

ஞானம் என்றால் என்ன? ஞானத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘WISDOM’ ’ உணர்த்துவது என்ன?

W – Wellness – ஆரோக்கியவாழ்வு

I –   Independence of Science – விஞ்ஞானத்தின் சுதந்திரம்

S – Self Care – சுயப்பராமரிப்பு

D – Divine Blessings – தெய்வீக ஆசி

O –  Open to all to see the relief – நிவாரணம் காண அனைவரிடமும் திறந்த மனதோடு இருத்தல்

M – Matches Mother Earth’s capacity to live in love, Peace and Harmony – அன்பு,அமைதி, நல்லிணக்கத்துடன் வாழ அன்னை பூமியுடன் பொருந்திப்போதல்

தெய்வீக ஆற்றலின் நுண்ணறிவின் சேமிப்புக்கிடங்காக உடல் உள்ளது. உங்களைப் பேணிக்காக்கும் திறனை அது கொண்டுள்ளது. நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலை உட்பட அனைத்துச் சூழ்நிலையிலும் சிறந்ததை அது அளிக்கிறது. உயிர்மூச்சு மூலம் இந்தத் தெய்வீக ஆற்றலைத் தொடர்ந்து நாம் பெறுகிறோம்.

‘மூச்சு இருந்தால் எல்லாமே இருக்கு’ என்னும் சொற்றொடர் மூச்சுதான் அனைத்திற்கும் மூலாதாரம் என்பதை உணர்த்துகிறது. இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும்போது, “உடலின் ஞானத்தை நாம் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறோம்” என்று நாம் சொல்லிக்கொள்ளலாம்.

ஞானம் என்பது கடைச்சரக்கல்ல. அது எப்போதும் உடலுக்குள் உறைந்திருப்பது. உயிர்மூச்சின் மூலம் நாம் அதனை உணர்ந்துகொள்ளலாம். அங்கேயே இருந்து ‘மூச்சுக்கு உரிய முக்கியத்துவம்கொடுங்கள்’. குழந்தைப்பருவத்திலிருந்தே இந்த ஞானத்துடன் நீங்கள் வளர்ந்துவந்திருக்கிறீர்கள். இந்த ஞானத்திற்காக நாம் நமது இதயத்தைத் திறந்துவைக்க வேண்டியுள்ளது. அதற்காகப் பின்வருவனவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

1. மருந்து உட்கொள்வதை நிறுத்திவிடுவதே இலக்கு.
2. உறங்குவது முதற்படி.
3. உடலுக்குத் தரும் ஓய்வு தூங்குவதற்கான முதற்படி ஆகும். ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை நீங்கள் பழுதுபார்க்கமாட்டீர்கள், தானே!
4. பழங்கள், உலர்கனிகள்,பச்சைக் காய்கறிகள், பழச்சாறு – மூலிகைகள் உட்பட – மற்றும் கறிமசாலாப் பொருட்கள் ஆகியன மட்டுமே உங்களுக்குச் செரிமான ஓய்வைத் தரக்கூடியவை. நீங்கள் இளைப்பாறும் நேரங்களில் அவற்றை உண்ணுங்கள். ஓடிக்கொண்டிருக்கும் வண்டிக்கு பெட்ரோல் போடாதீர்கள்
5. உடலின் பணிகளை மேற்கொள்வதற்கான நீரை உயிர்மூச்சு ஒவ்வொன்றும் கொண்டுவருகிறது.

உடல் ஞானத்தை அறிந்துகொள்வது இந்த விதிகளைப் பின்பற்றும் நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கும். இந்த ஐந்து விதிகளையும் (பஞ்சரத்தினங்கள்), நீங்கள்
உடல்நலக்குறைவாக இருக்கும்போது பயன்படுத்திவந்தால், நோயிலிருந்து மீள்வது எத்தனை எளிதானது என்பதை உணர உங்களுக்கு உதவிகரமாக அமையும்.

உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காணப்படும் ஞானமானது, ஜலதோஷம், இருமல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் எரிச்சல் போன்ற பல வழிகளில் உடலிலிருந்து கழிவுகளைப் பாதுகாப்பாகவும் திடமாகவும் உறுதியாகவும் அகற்றிவிடுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டுவிட்டால் அளவற்ற ஆரோக்கியத்தை, எல்லையற்ற ஆனந்தத்தை நாம் அனுபவித்துணரலாம்.

மருந்தானது கழிவுகளை உடலுக்குள் திரும்பவும் கொண்டுவந்துவிடுகிறது. மருந்தின் பின்விளைவுகள் நாம் நன்கு அறிந்ததே ஆகும். அது தரும் நிவாரணம் தற்காலிகமானதே. நமது சொந்தக் குடும்பத்தினரில் பலர் – நண்பர்கள் உட்பட – இதற்கான சிறந்த அத்தாட்சியாக உள்ளனர்.

உடலை ஆசிரியராக ஏற்றுக்கொள்ளுங்கள். உடலை மருத்துவராக மதித்து ஞானத்தைப் பேணி வளர்த்துக்கொள்ளுங்கள்.

ஞானவானாக மாறுங்கள்…

ஆரோக்கிய பாடம் – 14

நமது கடந்த கால வரலாற்றிலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகள்

மானிடவியல் என்ற விஞ்ஞானமானது கடந்தகாலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும் இன்று அவர்கள் எவ்வாறு வாழ்வைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு புரிதலை நமக்கு அளிக்கிறது.

மழைவனங்களில், ஆதிவாசிகள் என்றும் பழங்குடியினர் என்றும் அழைக்கப்படும் சமூகத்தினர் இன்றும் கூட இயற்கையுடன் இணைந்N;த வாழ்கின்றனர். இந்தச் சமூகத்தினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மூலாதாரத்தைப் (இயற்கையை) பேணிக்காத்து வருகின்றனர். இது அவர்களின் சொந்த வாழ்வாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும் ஒரு பண்பாடு ஆகும். அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தது. இணைந்துவாழ்தல் இயல்பானதாக இருக்கிறது.

அனைவரிடமும் அனைத்துடனும் எப்போதும் ஒத்துழைக்கும் அகஞானம் அவர்களுடைய வாழ்வில் இடம்பெற்றுள்ளது. இன்று கூட நவீனமருந்துகளின் துணையோ இடையீடுகளோ இன்றி அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துவருவதை நாம் காணலாம். இதன்மூலம் கிடைக்கும் கீழ்க்காணும் 3 செய்திகளை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

1. எதுவும் வீணாவதில்லை என்பதால் கழிவுகள் என்று எதுவும் கிடையாது என்ற தனித்த காரணியை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

2. விஞ்ஞானயுகத்தின் வாயிலாக நாம் மேற்கொண்டிருக்கும் முன்னேற்றப் பயணத்தையும் நம் உடலினுள் தங்கியுள்ள கழிவுகள் (மலச்சிக்கல்) நம் சுற்றுச்சூழலிலுள்ள கழிவுகள் ஆகியவற்றின் அளவுகளையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

3. பழங்குடிச் சமூகத்தில் மருத்துவத் தொழில்நுட்பம் உட்பட தொழில்நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்தும்பொழுது ஏற்படும் நோய் மற்றும் இணக்கமின்மையைத் தொடர்ந்து கழிவுகள் தோன்றுகின்றன.

உள்ளேயிருந்தும் (உடல்) வெளியேயிருந்தும் (சுற்றுச்சூழல்) கழிவுகளை அகற்றும்போது மட்டுமே நாம் உண்மையிலேயே முன்னேறுகிறோம் என்பது தௌ;ளத்தெளிவாகும்.

நோய்நொடியின்றி முன்னேற வேண்டுமானால், இயற்கையுடனான தொடர்பு குறித்து நாம் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, அதற்காக வருத்தம் கொள்ள வேண்டும்.

இயற்கை (NATURE) என்பதற்கு எழுத்துவாரியாக இப்படிப் பொருள் காணலாம்:

N – Nobody can Compete with Nature – இயற்கையுடன் எவரும் போட்டியிடமுடியாது

A – Absorbs all Natural matter and not man made – மனிதனால் உண்டாக்கப்பட்ட  செயற்கையானவற்றை அல்லாமல் அனைத்து இயற்கை அம்சங்களையும்
உட்கிரகித்துக் கொள்கிறது

T – Totally reliable – முற்றிலும் நம்பகத்தன்மை கொண்டது

U – Unlimited capacity to renew all the time.  Creates reasons of growth, rest and renewal – எந்நேரமும் புதுப்பித்துக்கொள்ளும் வரையற்ற திறனைக் கொண்டது.
வளர்ச்சி, ஓய்வு, புதுப்பித்தல் ஆகியவற்றின் பருவங்களை உருவாக்குகிறது

R – Recharges itself, without any Battery and Bank Account – வங்கிக் கணக்கோ பாட்டரியோ
இல்லாமல் தனக்குத்தானே புத்துணர்வூட்டிக் கொள்கிறது

E – Everyone is equal – எல்லாம் சமம்

பாதுகாப்பு, உறுதிநிலை, ரம்மியம் என்பதற்கும் மேலாக வேறெதுவும் இருக்க முடியுமோ? உடல் நலிவுற்றிருக்கும் நிலையில் பழங்களையும் உலர்கனிகளையும்
உட்கொள்ளும்பொழுது, இயற்கையின் ஆற்றலை நாம் அனுபவித்துணர்கிறோம். தொன்மையான பண்பாட்டில் இந்தத் தொடர்பு இருப்பதை நாம் காணமுடியும். நமது முனிவர்கள் கனிகளைப் புசித்து நலமாக வாழ்ந்தனர். வழிபாடுகள் அனைத்திலும் நாம் பல்வேறு பழங்களைப் பயன்படுத்திவருகிறோம். பழங்களால் நமது உடலை வழிபடுவோம். அதற்கான வாசகம் இதுதான்:

‘காலம் கடந்த தொன்மையான ஞானம் கொண்ட புதிய யுகத்தை அனைவருக்குமாக விஞ்ஞானயுகம் கொண்டுவருகிறது.’

ஆரோக்கிய பாடம் – 13

பனியுகம் (ICE Age) தொடங்கி, தகவல்யுகம் (ICE Age) வரை செல்லும் பயணம் பற்றி ஒரு பார்வை

வாழ்க்கை என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு பயணம். பனியுகத்தில் தொடங்கி, கற்காலத்திற்குச் சென்று, உலோககாலத்திற்கு வந்து, அதிலிருந்து விண்வெளியுகத்திற்கும் அதனைத் தொடர்ந்து விஞ்ஞானயுகத்திற்கும், பயனற்ற பொருள் நிலைக்கும் என நாம் தொடர் பயணம் செய்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் குப்பை மண்டிக்கிடக்கிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு, இன்னொரு புறத்தில் விஞ்ஞானம் நமக்கு அளித்திருக்கும் திறன் மூலம் நிலவைத் தொட்டுவிட்டோம். ஒரு பயணத்தின் இரு தோற்றங்கள் – ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். தொடக்கத்தில் இந்தப் பயணம் இயற்கைநியதியின் மூலம் நடைபெற்றது. இப்போது மனிதன் உண்டாக்கிய செயற்கையான, விஞ்ஞான விதிகளின் படி தொடர்கிறது. நல்வாழ்வுப் பாடங்களைப் பயன்படுத்தினால், நாம் பனியுகத்திற்கு (ICE Age), இயற்கைக்குத் திரும்பிச் செல்லலாம்.

இப்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதும் ஒருவகையில் (ICE Age) (தகவல்யுகம்) தான்.

I – Information – தகவல்
C – Communication – தொடர்பு
E – Entertainment – மகிழ்வூட்டல்

பழத்தை உண்பதன் மூலம் நாம் நமது செரிமானப் பாதையை மகிழ்வடையச் செய்யும்பொழுது (entertain) நமது உடலின்பொருட்டு அது பகிர்ந்து தொடர்புவைத்துக்கொள்வதால் (Communicates) நாங்கள் அனைவரும் நலம் என்ற தகவலை (Inform) நாம் அனைவருக்கும் தெரிவித்துவிடலாம்.

பனியுகத்திலிருந்து நாம் பயணத்தைத் தொடங்கியபோது, இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தோம். இன்றைய தினம் இந்த விஞ்ஞானயுகத்தில் பிணிநிலைத் தகவலான பயம் (FEAR) நம்மைப் பிணைத்திருக்கிறது.

நல்வாழ்வு என்பது ஒருமையுணர்வு. இயற்கை நியதியைப் பின்பற்றுவதன் வாயிலாகப் பிணிநிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தின் உயர்நிலையை நோக்கி நாம் செல்லலாம்.

நாம் ஏற்படுத்தும் யுகம் இன்னொருவகை ICE Age ஆக இருக்கும். அது இதுதான்:

I – Information of we will – நல்வாழ்வின் தகவல் மூலம்
C – Communicate to all this will bring – பின்வரும் செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்
E – Entertainment to all – ‘அனைவருக்கும் உல்லாசம்’

இதுதான் உண்மையான முன்னேற்றம்.

இயற்கையின் வாயிலாக மட்டுமே பயத்திலிருந்து நம்பிக்கைக்கும் குணப்படுத்துவதிலிருந்து அக்கறை கொள்ளும் நிலைக்கும் நாம் சென்று கொண்டிருக்கிறோம. அதுவே நல்வாழ்வு ஆகும்.

ஆரோக்கிய பாடம் – 12

ஆரோக்கியவாழ்வு!

சொர்க்கத்திற்குச் செல்லும் வழி

பழம் உட்கொள்வதுதான் நலக்குறைவிலிருந்து ஆரோக்கியவாழ்வுக்குச் செல்லும் வழி. தவறான உணவை உண்பதே உடல்நலக்குறைவுக்கு மூலகாரணம்.

பழத்திற்கான ஆங்கிலச் சொல்லான ‘குசுருஐவு’ என்பதனை எழுத்துவாரியாகப் பிரித்துப் பின்வருமாறு பொருள் காணலாம்.

F- Fast Way to Wellness – ஆரோக்கிய வாழ்வுக்கான விரைவுவழி
R- Reliable – நம்பகமானது
U- Universal Benefit – உலகளாவிய பலன்
I – Immediate Relief – உடனடியான நிவாரணம்
T- Trustworthy – நம்பிக்கை கொள்ளத்தக்கது

பழங்களை உட்கொள்வதன் வாயிலாக நீங்கள் சொர்க்கவாசியாக ஆவீர்கள். பழங்கள் ஆற்றலை அளிக்கக் கூடியவை. தூய்மைப்படுத்தும் பணியையும் அவை செய்கின்றன. பழங்களை உட்கொள்வதால் உடல்பொலிவு பெறுகிறது. நீங்கள் உடல்நலிவுற்றிருக்கும்போது உங்களைப் பற்றி உங்கள் பணியானது கவலைப்படுவதில்லை. ஆனால் பழம் உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளும். உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் காணும்பொழுதெல்லாம், அவர்களைப் பழங்களை உண்ணச் செய்யுங்கள். பிறரை உபசரிப்பதற்கான சிறந்த வழி, அவர்களுக்குப் பழங்களைப் பரிமாறுவதுதான்.

இறந்த காலம் என்பது வரலாறு.
எதிர்காலம் என்பது நல்வாழ்வு.
நிகழ்காலம் என்பது பழங்களை உண்பது.

பழங்கள் உண்பதை இப்போதே தொடங்குங்கள். பழம் என்பதே உங்கள் விவாதங்களின் தலைப்பாக இருக்கட்டும். உங்கள் உடலுடன் நேர்த்தியாகத் தொடர்பு கொள்ளும் ஒரே உணவு பழம் மட்டுமே.

பின்வரும் கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் பகிர்ந்துகொள்வோம்:

எதனை உண்பது?

பழம். இது உங்களுக்கும் பிறருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்தித்தருகிறது.

எப்போது உண்ணலாம்?

பசியும் தாகமும் தோன்றும்போதெல்லாம் உண்ணலாம். உங்கள் பிணி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

எவ்வளவு உண்ணலாம்?

போதும் என்ற உணர்வு ஏற்படும் வரை. பழத்தை அளவுக்கு அதிகமாக எப்போதும் உங்களால் சாப்பிடமுடியாது.

பழம் ஏன் இன்றியமையாதது?

உங்கள் உடலின் உட்புறத்தையும் வெளிச்சூழலையும் தூய்மைப்படுத்தும் ஒரே உணவு பழமே ஆகும். எங்கும், எப்போதும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம்
அளவு எதுவும் வைத்துக்கொள்ளாமல் வயிறு நிறைய சாப்பிடுங்கள்.

சாதாரண ஜலதோஷத்திலிருந்து புற்றுநோய் வரை நோய்வாய்ப்படும் எந்த நிலையிலும், பழத்தை உண்பதன் மூலம் மீண்டும் நலம்பெறலாம். நலக்குறைவுக்கு இட்டுச்செல்லும் பாதையை அடைத்து, நல்வாழ்வுக்கான பாதையைத் திறந்து தரும் ஒரே திறவுகோல் பழம்தான். சொர்க்க வாழ்வு எய்துவதற்கான ஒரே திறவுகோல் அது மட்டுமே. பழம் உண்போம், பயன்; காண்போம்.

ஆரோக்கிய பாடம் – 11

ஆரோக்கியம் என்பது ஒருமையுணர்வு

சூரியன், நிலவு, பருவகாலங்கள், மலர்கள், நிறங்கள், இசை, இடி ஆகியவற்றைப் பிரபஞ்சம் வரவேற்கிறது. கண்ணுக்குப் புலனாகக் கூடியதும் புலனாகாததுமான அனைத்தையும் வரவேற்கிறது. அனைத்திற்கும் அதற்கான இடமும் மகிழ்வும் உண்டு.

சூரியனுக்கும் நிலவுக்கும்

மொட்டுக்கும் மலருக்கும்

மலருக்கும் பழத்திற்கும்

பழத்திற்கும் விதைக்கும்
விதைக்கும் மண்ணுக்கும்

மண்ணுக்கும் நிலத்திற்கும்

நிலத்திற்கும் நீருக்கும்

நீருக்கும் மேகத்திற்கும்

மேகத்திற்கும் வானத்திற்கும்

வானத்திற்கும் பிரபஞ்சத்தி;ற்கும்

இடையேயான தொடர்பையும் இணக்கத்தையும் நம்மால் காணவும் உணரவும் முடியும்.

வெளிப்படையாகவும் வெளியே தெரியாமலும் முடிவற்ற வாழ்வு தொடர்கிறது. அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கின்றன, அனைத்தும் ஒருங்கிருந்து வாழ்கின்றன. அனைத்தும் வாழ்வோட்டமாகப் பாய்ந்து செல்கின்றன. இந்த வாழ்வோட்டத்தின் பின்னால் நல்வாழ்வு ஆற்றல் உறைந்துள்ளது. இயற்கையின் வாயிலாக நாம் நினைவுகூரக் கூடிய பாடம் இது. “ஏதோ ஒன்று இணையும்பொழுது நாம் பார்த்தாலும் பார்க்காமல் போனாலும் அது எப்போதும் பிணைக்கப்பட்டிருக்கும்”.

இந்தத் தொடர்பை நினைவில் கொள்வதே ஆரோக்கியவாழ்வு விழிப்புணர்வு ஆகும். ஆரோக்கியவாழ்வு என்பது இந்தத் தொடர்பின் விளைவே. அனைத்தையும் வரவேற்பதன் மூலம் பிரபஞ்சம் ஆரோக்கியவாழ்வை உருவாக்குகிறது.

“இரவு மற்றும் பகலுடன் பிணைக்கப்பட்டதாக நாட்கள் இருப்பது போல் நல்வாழ்வானது நோய்வாய்ப்பட்ட நிலையை வரவேற்கிறது”. இதனை அன்பு, அமைதி, நல்லிணக்கத்துடன் ஏற்றுக்கொள்வோம். இருளுடன் ஒளி பிணைக்கப்பட்டிருப்பதைப்போல, ஒளிமங்கி இருள் அடையும்போது இருள் இருப்பதில்லை. ஒளி வரும்பொழுது இருள் மறைகிறது. இருள் எனப் புரிந்துகொள்ளப்படுகிற நோய்வாய்ப்படும் நிலை, இயற்கையுடன் தொடர்பற்றுப் போவதால் உருவானதே ஆகும். இதைப் புரிந்துகொள்ளும்பொழுது நீங்கள் இயற்கையுடனும் ஆரோக்கியத்துடனும் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். நாம் இயற்கையிலிருந்து பிறப்பெடுத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தொடர்பை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும்.

பிறகு நீங்கள்

உடலுடன் உணவை

உணவுடன் உறக்கத்தை

உறக்கத்துடன் ஓய்வை

ஓய்வுடன் வளர்ச்சியை

இணைத்துக் கொள்வீர்கள். இந்தத் தொடர்பைக்குறைபடாமல் முழுமையாக எப்போதும் வைத்திருப்பதன் மூலம் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்து ஆரோக்கியவாழ்விற்கு வளர்ச்சி ஏற்படுகிறது. நாம் மேலே கண்டதற்கிணங்க, மொத்த பிரபஞ்சத்தின் மூலம் கனியானது நிலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. மொத்த பிரபஞ்சத்தையும் உங்கள் உடல் பிரதி நிதித்துவப்படுத்துகிறது.

ஆரோக்கிய பாடம் – 10

தலைமைப்பண்பும் உறவுநிலையும்

நம்மை வழிநடத்திச்செல்லும் தலைமையாக உடலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பயணம்.

வாழ்க்கை என்பது ஓர் உறவுநிலை. அனைத்து உறவுநிலைகளுக்கும் வழிகாட்டுதல் தேவை. நமது பிணைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்காக நாம் ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொடர்ந்து வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்கிறோம்.

நாம் நமது பயணத்தில் பலருக்கும் நம்பிக்கை, விதி, நன்றியுணர்வு ஆகியவற்றை அளிக்கிறோம் என்பதை அறிவோம்.

குடும்பம், பணிகள், சமுதாயம் ஆகியவற்றுக்குக் கடமைப்பட்டவர்களாய் இருப்பதை நாம் அறிந்துவைத்திருக்கிறோம்.

இந்த உறவுகள் எப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. ஆகவே நாம் கடமைப்பட்டுள்ளோம். அவை நமக்கு அன்பு, நேரம் ஆகியவற்றை அளிப்பதுடன் பொருளாதார ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவையும் தந்து ஊக்குவிக்கின்றன. இத்தனை ஆதரவும் வித்தகமும் இருந்தும் கூட மக்களில் பற்பலர் நோயுற்றவர்களாகவே இருக்கிறார்கள்;.

ஆரோக்கியத்தை விடவும் கூடுதலாக நோயுற்ற நிலையையே நாம் கண்டுகொண்டிருப்பது ஏன்? நமது உடலுடன் நமக்கு உறவு இல்லை என்பதே அதற்குக் காரணம் ஆகும்.

நமது பணி, குடும்பம் ஆகியவற்றுக்காகவும் வாகனங்கள், அடுக்களை உபகரணங்கள், கைபேசிகள் போன்ற சாதனங்களுக்காகவும் நமது நேரத்தை, உழைப்பை, ஆற்றலைச் செலவிடுகிறோம்.

அதேசமயம், நமது உடலுக்காக நேரத்தை, உழைப்பை, ஆற்றலை நாம் செலவிடுகிறோமா?

நமது உடலுடன் உறவுவைத்திருப்பதன் மூலம், நோய்வாய்ப்படும் நிலையிலிருந்து ஆரோக்கியவாழ்வை நோக்கி நாம் செல்கிறோம். நமது உடல் தலைமை தாங்கி நம்மை வழிநடத்தட்டும்.

உடல்தான் உங்களுக்காக, உங்களுக்காக மட்டுமே, மற்றவர்களுடன் உங்களுக்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என அறியுங்கள்.

அனைத்து வெளிப்புறப் பயணங்களும் உங்கள் உடல்வழியாகவே நடைபெறுகின்றன. நமது உடலுடன் உள்ள உறவை மதிப்பதை அது நினைவில் நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இயற்கை நியதிகளால் உடலின் தேவைகளை நிறைவு செய்வதன் வாயிலாக நம்மைச் செழிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே ஆரோக்கியவாழ்வுப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

உண்ண, உறங்க, ஓய்வெடுக்க, நோய் நீங்கி குணம் பெற நம் நேரத்தை ஒதுக்குவோம். மருந்து எதுவுமின்றி குணமாகிவிட்டதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உடலுடன் பயணப்படுவதே ஆரோக்கியவாழ்வுக்கான ஒரே வழியாகும்.

நோய்வாய்ப்படும் நிலையிலிருந்து ஆரோக்கியவாழ்வு நோக்கி எளிதாகச் செல்வதற்கு நமது உடலே பாலம் ஆகும்.

நோய்வாய்ப்படுதல் குறுகிய காலமே. ஆரோக்கிய வாழ்வுடன் நீண்ட நெடிய காலம் வாழலாம். இதுதான் உண்மை.

ஆரோக்கியவாழ்வுடன் நல்லுறவு பேண வேண்டும் என்பதற்காக உடலுடனான நமது பயணத்தை இப்போதே தொடங்குவோம்.

ஆரோக்கிய பாடம் – 9

ஆரோக்கியவாழ்வு என்பது ஒருமையுணர்வு

சுயபராமரிப்பே ஆரோக்கியம் பராமரிப்பு அதுவே பூமியைப் பராமரிப்பதும் எனலாம்

அர்ப்பணிப்பு

இயற்கையான அழகு என்பது ஆற்றல் வாய்ந்தது, சக்தியூட்டுவது, வியப்பூட்டுவது, சௌந்தரியமானது. இயற்கையின் அழகை நாம் பிரதிபலிப்பதே இயற்கையான அழகு ஆகும்.

இயற்கைஅழகு என்பது பலனை உருவாக்குவோரின் வாழ்க்கைக்கான அர்ப்பணிப்பு ஆகும்.

இயற்கையிலிருந்து கிடைக்கப்பெறும் ஆரோக்கியவாழிப்பாடம் இதுதான். கொள்ளை அழகுடன் கூடிய எத்தனை அற்புதமான செய்தி இது.

அர்ப்பணிப்பு என்றால் என்ன?

அர்ப்பணிப்பு என்பதனைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான னுநுஏழுவுஐழுN என்பதற்கு எழுத்துவாரியாகப் பொருள் காண்போம்:

D-Determination – தீர்மானம் (இயற்கையை மட்டுமே நாம் பின்பற்றுவோம்)

E – Enjoy the beauty and taste of fruits – கனிகளின் அழகையும் இன்சுவையையும் அனுபவிக்கவும்.

V – Voice your  TRUE feelings – உங்கள் உண்மையான   உணர்வுகளை உரத்துச் சொல்லவும்

O – Open your heart to feel deeply Love –  நேசத்தை ஆழ்ந்து உணர உங்கள் இதயத்தைத் திறந்துவைக்கவும்

T – Timeless factor of Nature –  we have always time for all including health

இயற்கையின் காலநேரமற்ற காரணி: ஆரோக்கியம்  உட்பட அனைத்திற்கும் செலவிட நமக்கு எப்போதும்  நேரம் உண்டு

I – Integrate your determination with action – உங்கள் தீர்மானத்தைச் செயல்பாட்டுடன் ஒருங்கிணைக்கவும்

O – One point attention. Pay attention to your nature. Not to Other people’s nature

ஒருமுகக் கவனம். உங்கள் இயற்கையின் பால்  கவனம் செலுத்தவும். மற்றவர்களின் இயற்கையிடம் அல்ல.

N – Natural health is the result – இயற்கையான ஆரோக்கியமே பலன்

இயற்கையான ஆரோக்கியம் என்பது நமக்கானது மட்டுமே – அர்ப்பணி;ப்பால் மட்டுமே கிடைக்கக்கூடியது அது என்பதை நினைவில்கொள்ளுங்கள். இயற்கை நம்மை உள்ளடக்கிய இயற்கையிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறது. இயற்கை நம் பொருட்டு, பிரகாசிக்கிறது. நாம் எதைச்செய்தாலும் நம்மை அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அந்த அர்ப்பணிப்புடன் வாழ்வோம்.

அன்பு அமைதி நல்லிணக்கம் ஆகியவற்றுடன்.

அனைத்தும் அன்பு.

அனைத்தும் நன்று.

அனைத்தும் ஒன்று

ஆரோக்கியபாடம்  8

புன்னகை விளைவிக்கும் மாயாஜாலம்

புன்னகை என்பது மகிழ்ச்சியின் இயல்பான பிரதிபலிப்பு ஆகும். மந்திர ஆரோக்கியவாழ்வு ஒரு புன்னகையிலிருந்து தொடங்குகிறது. புன்னகை என்பது ஆரோக்கியவாழ்வின் உடல்மொழி. புன்னகை, ஆரோக்கியவாழ்வைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. புன்னகை, குழந்தைகளின் மழலைமொழி. புன்னகை ததும்ப குழந்தைகளுடன் கலந்து பழகினால், அவர்கள் சிரித்து மகிழத் தொடங்குகிறார்கள். ஆகவே, ஆரோக்கியவாழ்வு வாழ்தல் என்பது புன்னகையுடன் பங்களிப்பு செய்வதே ஆகும்.

மலர்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மூலமாகவும் மனிதர்கள் உள்ளிட்ட அழகிய உயிரினங்கள் வாயிலாகவும் இயற்கை புன்னகை புரிகிறது. அனைத்தும் நலம் என்ற செய்தியைப் புன்னகை தெரிவிக்கிறது. ஒரு தென்றலைப் போல நேர்மறை ஆற்றலைப் புன்னகை கொண்டுவருகிறது. ஒவ்வொருவரையும் புன்னகை இளைப்பாற்றுகிறது. புன்னகை என்பது பிரபஞ்சம் வழங்கும் பேராதரவு.

இனி, SMILE என்ற ஆங்கிலச்சொல்லுக்கு எழுத்து பிரித்துப் பொருள் காண்போம்:

S – Support – ஆதரவு

M – Melt Worry – கவலையைக் கரையச் செய்தல்

I – Inexhaustible quality –  குறையாத பண்பு

L – Love shines like the sun through the cloud  –   மேகத்திற்கிடையே தோன்றும் சூரிய ஒளிபோல் நேசம் ஒளிருதல்

E – Entering Point for peace –  அமைதிக்கான நுழைவுப்புள்ளி

நீங்கள் புன்னகை பூக்கும்பொழுது, விவாதம் ஒன்று, ஓர் உரையாடலாக மாறிவிடுகிறது. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீண்விவாதத்தில் ஈடுபடவில்லை என்ற உணர்வைப் புன்னகை தெரிவிக்கிறது. “முரண்படுவதற்குப் பதில் உடன்படுவோம்”

புன்னகைக்கும் கள்ளப் புன்னகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு.

கள்ளப் புன்னகை அதிகாரத்தைக் காட்டுகிறது.

ஒரு புன்னகையானது ‘சரி’ (OK) என்ற சம்மதத்தை வாhத்தைகள் இல்லாமல் சொல்லிவிடுகிறது.

தவறான புரிதலால் ஏற்பட்ட இடைவெளியை இட்டுநிரப்பும் சிறந்த பாலமாகப் புன்னகை விளங்குகிறது.

அனைவரின் இதயங்களையும் புன்னகை திறந்துவிடுகிறது.

‘நீ’ மற்றும் ‘நான்’ என்பது ஒரு புன்னகையால் ‘நாம்’ ஆக மாறிவிடுகிறது. இவ்வாறு அனைவரும் ஒன்றாகி விடுகிறோம்.

புன்னகை நமது இதயங்களில் துடிக்கத் தொடங்கி, அன்பு, அமைதி, நல்லிணக்கத்தை உருவாக்கியவாறு பிரபஞ்சத்தைச் சென்றடைகிறது.

புன்னகையின் நெளிவு லட்சோபலட்சம் பேருக்கு மேலும் மேலும் நெளிவுகளை அலைஅலையாய் அனுப்பிவைக்கிறது.

ஆரோக்கிய பாடம் 7

ஆனந்தம் (Joy) / பணி (Job)

அனுபவித்தல் – ஆனந்தத்திற்குள் புகுதல்

(Enjoy – Enter the Joy)

Enjoy என்கிற ஆங்கிலச்சொல் அனுபவித்தல் என்று பொருள்படும்.

Enjoy என்கிற ஆங்கிலச்சொல்லை En – joy என்று பிரித்து அதற்கு Enter the joy (ஆனந்தத்திற்குள் புகுதல்) என்று பொருள் கொள்ளலாம்.

JOB                                                            JOY

J – Joy (ஆனந்தம்                                  J – Joining – (இணைதல);

O – Out of (அதிலிருந்து)                     O – Outside – (வெளியே)

B – Body (உடல்)                                      Y – Years and years of Love
(பல்லாண்டுகால நேசம்)
உடலிலிருந்து ஆனந்தம்
பல்லாண்டுகால
நேசத்திற்கு
வெளியே இணைதல்)

நல்வாழ்வானது ஆனந்தத்தின் அழகையும் சௌகரியத்தையும் கண்டறிகிறது. நாம் எதைச் செய்தாலும் அதை ஆனந்தத்துடன் செய்யும்பொழுது, காலம் வளர்கிறது, வாழ்க்கை முன்னேறிச்; செல்கிறது, ஆரோக்கியம் அதனைப் பின்தொடர்கிறது.

நீங்கள் உங்களை அளித்தால் சட்டென்று அனைத்தும் சாத்தியமாகும். பணி என்று ஒன்றில்லை – உடலிலிருந்து ஆனந்தத்தைப் பெறுவதே (Joy out of body) பணி (Job) என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உடல் என்பது ஆனந்தத்தின் – பேரின்பத்தின் – சேமிப்புக்கிடங்கு ஆகும்.

அஹம் பிரம்மாஸ்மி தத்வமஸி சச்சிதானந்தா’ – இந்த ஆனந்தம் ஒவ்வொரு படைப்பிலும் நிறைந்துள்ளது. மலர்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடு ஆகும். நிறங்களும் ஆனந்தத்தின் வெளிப்பாடே.

ஆனந்தம் என்பது என்ன? சூரிய உதயத்தை, அஸ்தமனத்தை, வானவில்லைக் கண்டு ரசிப்பது ஆனந்தம். நாம் ஒரு குழந்தையைப் பார்த்ததும் “இது அல்லவா ஆனந்தத்தின் அம்பாரம்” என்று சொல்லிவிடுகிறோம்.

ஆனந்தம் என்பது அனைத்திலும் உயர்ந்த ஆற்றல். அனைத்தையும் சாத்தியமாக்கும் உணர்வை அளிக்கும் மந்திர மூலம் அது. ஒவ்வொரு தருணத்திலும் புதைந்திருக்கும் அன்பளிப்புகளை ஆராதிப்பதிலிருந்து ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. அதிகபட்ச சாத்தியப்பாட்டு நிலைக்கு நிகழ்தருணங்களையும் எதிர்வரும் தருணங்களையும் உருவாக்கவும் ஈர்க்கவும் ஆனந்தம் அனுமதிக்கிறது.

ஆரோக்கிய பாடம் 6

இந்த ஆரோக்கிய உலகத்தில் வாழ்க்கை என்பது மிகச் சுலபமான – பயன்தரக்கூடிய – சிறந்த – முயற்ச்சியற்ற வளர்ச்சியை அடையக்கூடியவையாகும். அதன் ஆரம்பக் கட்டமும் அத்தியாவசியமான வழியும் நன்றியறிதலுடன் வாழ்தலே. எந்த சூழ்நிலையிலும் அமைதியாயிருங்கள் பணிவுடன் மனம் பரப்புங்கள். உங்களுடைய மூச்சுக்காற்று கடவுளின் சக்தியிலிருந்து உங்களுக்கு கிடைக்கிறது. அதை பெறுங்கள்.

கடவுள் ஒளியே உங்களை பிரகாசம் அடையச் செய்கிறது. கடவுளின் அன்பே உங்களின் இதயத்தை தொட்டு நன்றியறிதலை வழியச் செய்கிறது. இந்த அடிப்படை அமைப்போடு உங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கப்படுகிறது. இதுவே ஆரோக்கியம் என்பதை அறிந்துகொள்வதற்கு உங்களை பழக்குங்கள். அதில் ஒன்றினைவதற்கே உங்கள் உடல் காத்திருக்கிறது. உங்கள் உடலை நீங்களே சக்திமிக்கதாக மாற்றுவீர்கள் என்று உங்கள் உடலுக்கு நன்றாக தெரியும். அன்பு – அமைதி – நல்லிணக்கம் என்ற பாடலை பாடுவதின்மூலம் – ஒவ்வொரு திசு அணுக்களும் – உயிர்தொகுப்பும் – உறுப்புகளும் – இயங்குமுறைகளும் விழிப்படைகிறது.

அனைத்தும் அன்பு – அனைத்தும் ஒன்று – அனைத்தும் ஆரோக்கியம் என்ற செய்தியை உங்களுக்கு அளிக்கிறது. ஆகவே உங்கள் வாழ்க்கையின் அனைத்து திருப்தியற்ற நிலைக்கும் நன்றியே சிறந்த முடிவை தருகிறது. கடைசியாக நன்றாக வாழ்வதற்கு – சரியாக உண்ணுங்கள்,

நன்றி என்பது

அடிச்சுவடு
அமைதி
ஏற்றுக்கொள்ளுதல்
நம்பகத்தன்மை
ஒன்றினைத்தல்
வலிப் பொருத்தல்
சக்தியை பயன்படுத்துதல்

இயற்க்கைக்கு உங்களை அர்ப்பணித்தல்

இறுதியில் ஆரோக்கியத்தை அடைதல்

நன்றி உங்கள் பயத்தை போக்கி உங்கள் மனத்தை வெளிக்கொணருகிறது. ஆரோக்கியத்தை பற்றி எண்ணாத மனத்தையே நாம் கொண்டுள்ளோம் என்பதை மறவாதீர்கள். நன்றி சந்தோஷத்தை கொண்டு வருகிறது. நோயாளியாக மாறாமல் இருப்பதற்கு அமைதியை கடைபிடியுங்கள். நன்றி என்பது அடக்கமும் அமைதியுமே

ஆரோக்கிய பாடம் 5

“நீங்கள் எப்போதுமே சிலரை முட்டாளாக்கலாம், எல்லோரையும் எப்போதாவது முட்டாளாக்கலாம், ஆனால் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது” என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆரோக்கிய வாழ்க்கையில் இணைந்ததிருக்க இந்த அற்புதமான பழமொழி யை எல்லா நேரத்திலும் நினைவில் கொள்வோம். பின்னர் நீங்கள் ஆரோக்கியமாகி விடுவீர்கள். கடந்த பல ஆண்டுகளாக நாம் எல்லா நேரத்திலும் உடலின் சில பகுதியை ஏதோ ஒரு நேரத்தில் அல்லது வேறு நேரத்தில் முட்டாளாக்கினோம்.

ஆரோக்கிய வாழ்வின் முதல் புரிதல் – நாம் நம் உடலை முட்டாளாக்க முடியாது. நம்மை (உடல்) முட்டாளாக்குவதை நிறுத்துவதற்கு, நமது உடல் நம்மை எச்சரிக்கும் சக்தியே உடல் காண்பிக்கும் தீங்கு விளைவிக்கும்-நோய். இது நாம் இயற்கையான உணவு விதிகளை மதிக்க உடலுக்கு விடுக்கும் எச்சரிக்கை.

அதாவது அதிக பழங்களை உட்கொள்ளுமாறு நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் நிறுத்துமாறு எச்சரிக்கிறது என்பது மட்டுமல்ல. நம் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் என்ன ஒரு முட்டாள் என்பதை உணர முடியும்!
தேநீர், காபி, ஆல்கஹால், புகைப்பிடிப்பதை நிறுத்துபவர் அவர்கள் என்ன முட்டாள் என்பதை ஏற்கனவே உணர்ந்து கொண்டு விட்டனர்.

உணவு மிக மோசமான குற்றவாளிகளை உருவாக்குகிறது. அனைத்து அசைவங்களும் CRIMINALS அல்ல. அனைத்து கடுமையான முக்கிய குற்றவாளிகளும் அசைவ உணவு உண்பவர்கள். நம் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இதுவே உண்மை.

உண்மை ஒன்றே! ஆரோக்கியம் என்பது அன்பு அமைதி மகிழ்ச்சி ஆகியவற்றின் நல்லிணக்கம்.

ஆரோக்கிய பாடம் 4

கற்றல் அல்லது நினைவில் வைத்தல்

ஆரோக்கிய வாழ்விற்கு நினைவில் வைத்தல் ஒரு முக்கிய திறவுகோல். உங்கள் அனுபவத்தின் மூலம் நினைவில் கொள்வது ஞானத்திற்கு வழிவகுக்கிறது. கற்றல் அறிவை அதிகப்படுத்தும். “ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது” இந்த பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். நாம் எப்போதும் நினைவில் கொள்வோம், எல்லாம் நன்மைக்கே நடக்கிறது, அனைத்தும் ஒன்று, நாம் அனைவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் விளையாடுகிறோம், விளையாடியுள்ளோம், ஆரோக்கிய வாழ்வில் புலப்படும் பாத்திரத்தை வகிப்போம்.
குழந்தைகளாக, இப்போதுள்ள எல்லா குழந்தைகளையும் போலவே, நாம் அளவில்லா மகிழ்ச்சியுடன் மட்டுமே இருந்தோம்.

இதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க முடிவதற்காக நன்றி கூறுவோம்.

கூட்டாக பயணத்தை மேற்கொள்வோம். இதை நாம் தொடங்கி விட்டோம். நாம் ஆரோக்கிய பயணத்தின் ஒரு அங்கம். ஆரோக்கியம் நம்முடையது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த மேற்கோளைப் பகிர்ந்து கொள்வோம்:

” இன்றைய நாள் அமைதி நிறைந்திருக்கட்டும்.
நம்புவோம். நாம் இருக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு சுவாசமும் அமைதி, அன்பு, நல்லிணக்கத்தை தருகிறது.

நம் மீதும் மற்றவர்களிடமிருந்தும் விசுவாசத்தால் பிறந்த எல்லையற்ற சாத்தியங்களையும் நினைவில் கொள்வோம். அனைத்தும் தெய்வீக முடிவு.

எல்லாவற்றையும் பணிவுடன் ஒரு புதையலாக ஏற்றுக்கொள்வோம்.

நாம் பெற்ற பரிசுகளைப் பயன்படுத்துவோம், மேலும் நமக்கு வழங்கப்பட்ட அன்பை அனைவரிடமும் கொண்டு செல்வோம்

நாம் இரக்கத்துடன் இருப்பதைப் போலவே திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்போம்.

நன்றியுணர்வு நம் இரத்தத்திலும், எலும்புகளிலும், சதைகளிலும் காணப்படட்டும்.

நம் ஆன்மாவையும் உடலையும், அன்பைப் புகழ்ந்து நடனமாட அனுமதிப்போம். நம் ஒவ்வொருவருக்கும் இந்த அன்பும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாடுவோம் ”

இது ஆரோக்கிய வாழ்க்கை. இயற்கையைப் போலவே கூட்டாகவும், ஒற்றுமையாகவும் ஆரோக்கிய இயக்கங்களுக்காக இந்த தருணத்தை நகர்த்தி நடனமாடுவோம். இந்த நினைவாற்றல் ஒவ்வொரு கணமும் நாம் செய்து கொண்டிருக்கும் கற்றலை உள்வாங்க உதவும்.

நம் மனமும் கற்றலும் நம் ஒரு பகுதியாகும், இதன் மூலம் நம் இதயத்தைத் திறக்க முடியும்
உணர்வு. ஆகையால் இது சிந்தனையிலிருந்து உணர்வு வரையிலான ஒரு பயணம்,

ஆரோக்கிய பாடம் 3

மண் மற்றும் உடல்

அன்னை பூமி மண்ணை மற்ற அனைத்து ஆற்றல்களோடு, அதாவது பஞ்ச பூத சக்தியுடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்கிறது. நம் உடலும் அவ்வாறே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையில் நமது பயணம் மிகவும் எளிதாக மாறி விடும்.

நம் மண்ணுக்கு நாம் என்ன செய்தோம் என்பது நமக்குத் தெரியும். நாம் உரங்கள் மற்றும் அதிக இரசாயனங்கள் போட்டோம், சிறிது காலம் நல்ல விளைச்சலைப் பெற்றோம். இப்போது, ஆரோக்கிய உலகில் நாம் இயற்கையான உரத்தினைப் பயன்படுத்துகிறோம், ரசாயனங்கள் அல்ல. மண்ணை விட பூமிக்கு அதிக சக்தி உள்ளது போல, உடலுக்கு மண்ணை விட அதிக சக்தி உள்ளது உண்மை. நீங்கள் மண்ணை மட்டும் எடுத்து ஆற்றலை மேம்படுத்த முடியாது. சூரிய ஒளி, நிலவொளி, நீர், காற்று சுழற்சி மற்றும் உயிர் நிறை ஆகியவற்றை வைக்கும்போது மண் சிறப்பாக செயல்படுகிறது. அது போல உடல் ஒட்டுமொத்தமாக இயற்கையோடு இயங்குகிறது. உடலை பாகங்களாக குறைத்து தனித்தனியாக சரிசெய்கிறோம். இது வேலை செய்ய முடியுமா? நிவாரணம் பெற, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, மூலிகை போன்றவற்றை நாம் பயன்படுத்துகிறோம்.

எல்லாவற்றிற்கும் ஒரு குறுகிய கால நன்மை உண்டு, அது நிவாரணம். நீண்ட கால போக்கில் நோய் மற்றும் அசௌகர்யங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பது நமக்கு தெரியும். கவலை தொடங்குகிறது. நாம் உடனடி ஆறுதல் மற்றும் நிவாரணத்தை நாடி செல்வது இன்றைய கலாச்சாரமாகிவிட்டது. மருந்தை விழுங்குவது இயல்பாகிவிட்டது. சுவாசம் மற்றும் இயற்கையின் மூலம் வரும் ஆரோக்கிய ஆற்றலை நாம் பதட்டம், கவலை கறி மற்றும் மருந்துகள் என அதை வீணாக்குகிறோம். விவசாயிகள் ரசாயன உரங்களை (மருந்துகள்) நிறுத்துவதன் மூலம் சிறப்பான மற்றும் சிறந்த முடிவுகளைப் பெறுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மண் மீண்டும் புதிப்பிக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் காணவும் உணரவும் முடிகிறது கரிம, இயற்கை வேளாண்மை சூடு பிடித்துள்ளதை கொண்டாடுவோம். உங்கள் உடல் உங்கள் எஜமானன். நீங்கள் மருந்தை நிறுத்தி இயற்கை உணவைக் கொடுக்கும்போதுதான் உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

இதிலிருந்து நாம் எப்போதும் கற்று கொள்ளும் பாடமானது, ஒவ்வொரு வேதிப்பொருளும் ஒரு வேதிப்பொருள். அனைத்து மருந்துகளும் இரசாயனம் மற்றும் அழிவுகரமானவை. நல்ல செய்தி என்னவென்றால், மருந்துகளுடன் அறிகுறிகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஓய்வு, தூக்கம் மற்றும் பழங்கள் எப்போதும் நோயை பிரமாதமாக அகற்றும். அதுவே உங்கள் உடல் மற்றும் இயற்கையின் அதிசயம். “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என் உடல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நான் எப்போதும் உங்களிடம் சரணடைகிறேன்”. நாம் இதை நினைவில் கொண்டு அனைவரிடமும் பகிர்வோம்

ஆரோக்கிய பாடம் 2

ஆரோக்கிய உலகிற்கு வரவேற்கிறோம்

நன்றி. இந்த உலகில் ஒருவருக்கொருவர் அன்போடு நன்றி செலுத்துவோம். நாம் இதையே தேர்வு செய்துள்ளோம். நாம் பாக்கியவான்கள் என்பதை அறிவதற்கும், பார்ப்பதற்கும், அதை உணருவதற்கும், நமக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஹா!

எல்லாம் ஒரு எளிய யோசனையின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த ஆரோக்கிய உலகில் நான் இருக்கிறேன் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கலாம், அதை எப்போதும் உணருங்கள். நாம் அந்த ஆரோக்கியத்தில் வாழ்கிறோம்! இது ஆரோக்கிய வாழ்வின் ஆரம்பம். இப்போது உங்களிடம் அனுமதி உள்ளது. இந்த வாழ்க்கையானது எவ்வளவு அழகானது, எவ்வளவு எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை அனைவருக்கும் சொல்வோம்! எந்த தேடலும் இன்றி மகிழ்ச்சியை மட்டுமே பெறுகிறீர்கள். மகிழ்ச்சியை அன்றி வாழ்க்கை வேறு என்னவாக இருக்க முடியும்.. மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை!

முட்டாள்தனமாக இருக்க 2 வழிகள் உள்ளன. ஒன்று உண்மை இல்லாததை நம்புவது, மற்றொன்று உண்மையை நம்ப மறுப்பது.

இது எவ்வளவு உண்மை என்று எங்களுக்குத் தெரியும்! நோய் உலகை நம்புவதும், ஆரோக்கிய உலகை நம்பிக்கை கொள்ளாததும் முட்டாள்தனம்.

அனைவருக்கும் உண்மையை அறிவிப்போம். எல்லா நேரமும் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. வாழ்க்கைக்கு ஆம்.. வாழ்க்கைக்கு ஆம்… வாழ்க்கைக்கு வாழ்க்கை சேர்க்கிறது.

ஆரோக்கிய பாடம் – 1

ஆரோக்கிய வாழ்க்கை

பின்வருவனவற்றைப் புரிந்து கொள்ளுங்கள், படித்து உணருங்கள்:

1. அன்பு கிடைக்கும் நிகழ்காலம் சிறந்த பரிசு! (அன்பு என்பது உணர்வு, பரிசு உணர்வை பிரதிபலிக்கிறது)

2. தனித்தன்மையை இலக்காகக் கொள்ளாமல் எப்போதும் அனைத்து நல்லனவற்றை உள்ளடக்கிய நிலையில் இருங்கள். ஆரோக்கிய உலகம் எப்போதும் பரந்த அளவிலான நல்லவைகளை உள்ளடக்கியது. அனைவரின் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நபராக இருங்கள்.

3. அனைவருக்கும் மிக உயர்ந்த நன்மைக்காக ஆசைப்படுங்கள். ஆசை உத்வேகத்திலிருந்து வருகிறது. இயற்கை இதை ஏற்கனவே உங்களிடம் வைத்துள்ளது.

4. ஆம் மற்றும் இல்லை என்று இரண்டு மிக சக்திவாய்ந்த சொற்கள் உள்ளன. ஆம் இதயத்திலிருந்து வருவது, அது எப்போதும் எளிதானது. இதயத்தின் துடிப்பு சுய விளக்கமாகும். ஆம் ஆம் ஆம் என்று சொல்வதை நீங்கள் கேட்கலாம். எப்போதும் அதைக் கேளுங்கள். இதயத்தின் ஒலி உங்களில் நன்றியை உருவாக்குகிறது. அது பிரபஞ்சத்தின் மொழி.

பிரபஞ்சம் ஒரு வார்த்தையை குறிக்கிறது. “இல்லை” என்ற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது . ஆரோக்கிய வாழ்வில் நாம் எப்போதும் அனைவருக்கும் ஆம் என்று எப்போதும் கூறுகிறோம். இதில் தெய்வீகம் உங்களுடன் இணைகிறது. மீதமுள்ள உணர்வு உங்களை ஒளிரச் செய்ய அனுமதிக்கும் மற்றும் நீங்கள் இயற்கையின் பிரதிபலிப்பு என்று ஆழமாக உணர்கிறீர்கள்.

எல்லாம் அன்பு! எல்லாம் ஒன்று! அனைத்தும் நன்மைக்கே நடக்கிறது!